உங்கள் அன்பிற்குரியவருக்கு இந்த இடத்தில் மச்சம் இருந்தால் கவனம்! பலருடன் தொடர்பு இருக்குமாம்!

சாமுத்திரிகா சாஸ்திரத்தின் படி உடலில் பல்வேறு பாகங்களில் இருக்கும் சில மச்சங்களுக்கு என்ன பலன் சொல்கிறது என பார்க்கலாம்.

நெற்றி

நெற்றியின் வலது புறத்தில் நடுவில் மச்சம் இருப்பவர்கள் வசீகரமும், காதல் உணர்வும் அதிகம் கொண்டவர்கள் என்று கூறப்படுகிறது. இந்த இடத்தில மச்சம் இருப்பவர்கள் அடிக்கடி காதலில் விழுந்துகொண்டே இருப்பார்கள் என்று சாஸ்திரம் கூறுகிறது.

கண்

ஒருவேளை வலது கண்ணிற்கு பக்கத்தில் மச்சம் இருந்தால் அவர்களுக்கு பல தொடர்புகள் இருக்கும், அதேபோல இடது கண்ணிற்கு பக்கத்தில் இருந்தால் அவர்கள் வாழ்க்கையில் பல ஏமாற்றங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.

காது

ஒருவேளை காதுக்கு அருகே அல்லது காதில் மச்சம் இருந்தால் அவர்களின் காதல் வாழ்க்கை மிகவும் சுறுசுறுப்பானதாக இருக்கும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இவர்கள் நீண்ட காலம் வாழ மாட்டார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.

முகம்

ஒருவரின் முகத்தில் ஒரு மச்சத்திற்கு மேல் இருந்தால் அவர்கள் வாழ்க்கை சிறப்பானதாக இருக்கும், அதேசமயம் இவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட முறை காதலில் விழுவார்கள். இவர்கள் வாழ்க்கையில் அடிக்கடி ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்படும்.

கன்னம்

வலது கன்னத்தில் மச்சம் இருப்பவர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பவராக இருப்பார்கள் பொருளாதாரரீதியாகவும் இவர்கள் சிறப்பாகவே இருப்பார்கள். அதுவே இடது கன்னத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் வாழ்க்கையில் நிறைய போராட்டங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.

உதடுகள்

மேல் உதட்டில் மச்சம் இருப்பவர்கள் இயற்கையாகவே காதல் உணர்வு அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு பல தொடர்புகள் இருக்கும். கீழ் உதட்டில் மச்சம் இருப்பவர்கள் அதிக வறுமையில் இருப்பார்கள்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]