உங்களது விரல் நகத்தை கொண்டு முழுவதுமான குணாதிசயங்களை அறிந்துக்கொள்ளலாம்- உங்களுக்கு எப்படி??

உங்கள் எதிர்காலத்தை அறிந்து கொள்ளும் பொருட்டு சிலர் கை ரேகை பார்த்து வழக்கம். கை ரேகை உண்மையோ இல்லையோ, உங்கள் நகம் சொல்லும் ஜோசியத்தை பார்த்தால் உங்கள் உடல் நலத்தை பேணிக்காக்கலாம்.

நகத்தில் அரைச்சந்திர வடிவம் இருந்தால் அது தைராய்டு மற்றும் உணவு செரிமானம் சரியாக உள்ளது என அர்த்தம். உடல் நலம் சரியாக உள்ளது எனலாம்.

நகத்தில் அரை சந்திர வடிவம் இல்லாவிட்டால் அவர்கள் தைராய்டு குறைவானவர்களாக இருக்க வாய்ப்புள்ளது. இதனால் மன அழுத்தம், மனம் அலைபாய்தல், உடல் பருமனாகுதல், முடி பிரச்னைகள் ஏர்படும்.

வெள்ளை புள்ளியுள்ள நகம்:
விரல் நகத்தில் வெள்ளை புள்ளிகள் அதிகளவில் இருப்பின், அவர்களுக்கு வைட்டமின் குறைப்பாடு உள்ளது என தெரிந்து கொள்ளலாம். அதோடு ஒவ்வாமையால் இவ்வாறு ஏற்பட்டது என்று அறிந்துகொள்ளலாம்.

வெள்ளை நகம்:
நகம் வெள்ளையாக இருந்தால் அவர்களுக்கு ஹெபடைடிஸ் (ஈரல் பிரச்னை) அல்லது மஞ்சள் காமாலை இருக்க வாய்ப்பு அதிகம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]