உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தனித்தே போட்டியிடுவோம் – ஈ.பி.டி.பி உத்தியோகபூர்மாக அறிவிப்பு!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தனித்துப் போட்டியிடவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் மற்றும் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் ஆகியோரால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –
எதிர்வரும் ஜனவரி மாதம் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல்களில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தனித்தே தனது வீணைச் சின்னத்தில் போட்டியிடவுள்ளது.
கடந்த காலங்களில் எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மத்தியுடன் முன்னெடுத்துவந்த இணக்க அரசியலூடாக வடக்கு மாகாணம் மட்டுமல்லாது கிழக்கு மாகாணத்திலும் பல்வேறுபட்ட மக்கள் பணிகளை பல இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்து முன்னெடுத்து மக்களுக்கான தேவைகளை நிறைவுசெய்துகொடுத்திருந்தோம்.

அந்த வகையில் எமது கட்சி மக்களின் நலன்களை பாரபட்சமற்ற வகையில் முன்னிறுத்தியதாகவும் கட்சியின் நிலைப்பாடான மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்பதன் பிரகாரம் நாம் எமது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]