ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்து

ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்து

உதய சூரியன்

சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சி உள்ளிட்ட மேலும் சில கட்சிகள் இணைந்து ஆனந்த சங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவதற்கான ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது.

இவ்விடயம்தொடர்பான புரிந்துணர்வு கலந்துரையாடலொன்று யாழ் நாச்சிமார் கோவிலடியிலுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் அலுவலகத்தில் செயலாளர் அனந்த சங்கரி தலைமையில் இன்று காலை இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர்; சுரேஸ் பிரேமசந்திரன் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் வடக்கு மாகாண சபை உறுப்பினர் தியாகராஜா மற்றும் ஏனைய கட்சிகளான சனநாயக தமிழரசு கட்சி , ஈழரவ் ஜனநாயக முன்னணி, புனர் வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சி என்பன இக்கூட்டில் அங்கம் வகித்துள்ளது.

இது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கூட்டின் கொள்கை விளக்கம் தொடர்பில் சுரேஸ் பிரேமச்சந்திரன் சல கருத்துக்களை வெளியிட்டார்.

அத்துடன் ஏனைய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளையும் தம்முடன் இணைந்து கொள்ளுமாறும் அவர் அழைப்பு விடுத்தார்.

இதேவேளை இந்திய அரசின் பின்னணியில்தான் இவ்வாறான கூட்டமைப்பொன்றை உருவாக்க சுரேஸ் பிரேமச்சந்திரன் முயற்சித்து வருவதாக வெளிவந்துள்ள விடயம் தொடர்பிலும் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

அத்துடன் இவ்வாறானதொரு கூட்டணி கடந்த 2004 நான்கில் ஏற்பட்டிருந்தால் இறுதி யுத்த அழிவென்ப இடம்பெற்றிருக்காதென்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]