ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினர் இன்று தமது வேட்புமனுவினைத் தாக்கல் செய்தனர்

யாழ்ப்பாணம்; ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினர் இன்று வியாழக்கிழமை (21.12) தமது வேட்புமனுவினைத் தாக்கல் செய்தனர். யாழ்.மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் காலை 8.30 மணியளவில் தமது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ்;மாவட்டத்தில் உள்ள 16 உள்ளுராட்சி சபைகளுக்குமான வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.

அதன்பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து, ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மீதான நம்பிக்கையுடன் மக்கள் காத்திருக்கின்றார்கள்.

பிரதான 3 விடயங்களை முன்வைக்கப்பட்டுள்ளன. அதில், அன்றாட பிரச்சினை, அபிவிருத்தக்கான தீர்வு , அரசியல் உரிமைக்கான தீர்வு என்ற அடிப்படைக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். விசேட அதிகாரங்கள் உள்ளடக்கலாக மீளவும் அதிகாரங்களை வென்றெடுத்தல், கடந்த காலத்தில் தமிழ் தலைமைகள் மக்களை தவறான வழி நடத்தல்களின் கீழ் கொண்டு சென்றுள்ளார்கள்.

அந்த வழிநடத்தல்களை விலகி மக்களின் நம்பிக்கையினை வென்றெடுக்கும் வகையில் தீர்வு காணுவோம் என்றும் உறுதிபடத் தொவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]