ஈரான் நாடாளுமன்ற குழு நாளை மறுநாள் இலங்கைக்கு வருகிறது

ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் அலி லாறிஜனி ( Ali Larijani) தலைமையிலான குழு ஒன்று இலங்கைக்கு இந்தவாரம் விஜயம் செய்யவுள்ளது.

இவர்கள் நேற்றையதினம் ஈரானின் தலைநகர் தெஹரானிலிருந்து புறப்பட்டுள்ளனர். வியட்நாமுக்கு சென்றுள்ள இவர்கள் அங்கிருந்து புறப்பட்டு நாளை மறுதினம் இலங்கைக்கு வருகை தருவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விஜயத்தின்போது, இரண்டு நாடுகளின் நாடாளுமன்றங்களுக்கிடையிலான ஒத்துழைப்பு ,இருதரப்பு நல்லுறவு தொடர்பிலான விடயங்களை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று ஈரானின் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]