முகப்பு News ஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 58 பேர் காயம்

ஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 58 பேர் காயம்

ஈரான் நாட்டில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 58 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஈரான் நாட்டின் கெர்மானஷனா நகரில் 5.9 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

ஈரான் – கெர்மன்ஷனா நகரிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் நிலநடுக்கதால் ஏற்பட்ட அதிர்வுகளால் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்தனர்.

கெர்மான்ஷா மற்றும் தசேகாபாத் உள்ளிட்ட இடங்களில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ள நிலையில், இடிபாடுகளில் சிக்கி ஒருவர் பலியானதோடு, 58 பேர் வரை காயம் அடைந்துள்ளனர்.

5.9 ரிக்டரில் நிலநடுக்கம் பதிவாகியுள்ள நிலையில், கெர்மான் ஷாவில் இருந்து வடகிழக்கில் 88 கி.மீ. தொலைவில் பூமிக்கு அடியில் நிலநடுக்கம் உருவாகியுள்ளதாக கூறப்படுகின்றது. முன்னதாக 2 தடவை நில அதிர்வு உணரப்பட்டதோடு, அவை 3 ரிக்டர் ஆக பதிவாகி இருந்தது.

மேலும் தற்போது இடிபாடுகளை அகற்றும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளதையடுத்து பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

அத்தோடு, குறித்த நிலநடுக்கம் அண்டை நாடான ஈராக் தலைநகர் பாக்தாத்திலும் உணரப்பட்டதாகவும், இதனால் யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கெர்மான்ஷா மாகாணம் ஈராக் எல்லையில் மலைகள் சூழ்ந்த பகுதி. கடந்த ஆண்டு நவம்பரில் இங்கு 7.3 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன்போது கெர்மான்ஷா நகரமும், அதைச் சுற்றியுள்ள கிராமங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டதோடு, 530 பேர் பலியாகினர். ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com