ஈரானில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தால் பெண் ஒருவர் பலி

ஈரானில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தால் பெண் ஒருவர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

ஈரானின் தென்கிழக்கு பகுதியில் நேற்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.6 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தால் பல கிராமங்களில் உள்ள வீடுகள் இடிந்து விழுந்தன.

குறித்த நிலநடுக்கத்தில் 2 பேர் பலியானதாக முதலில் தகவல் வெளியான நிலையில், ஆனால் இடிபாடுகளில் சிக்கி 18 வயது பெண் ஒருவர் மட்டுமே பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரானில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. அந்தவகையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இடம்பெற்ற பயங்கர நிலநடுக்கத்தில் 620இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]