ஈராக்கில் குண்டுதாக்குதல்களினால் 38 பேர் பலி

ஈராக்கின் இருவேறு பகுதிகளில் நடத்தப்பட்ட கார் குண்டுதாக்குதல்களினால் 38 பேர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். தலைநகரான பாக்தாத்தில்(Baghdad)  சனநெரிசல் மிக்க ஒரு பகுதியில் முதலாம் தாக்குதல் நடத்தப்பட்டு சிறிது நேரத்தில் மற்றுமொரு தாக்குதல் அல் கின்டி9 (Al-Kindi) வைத்தியசாலையிலுள்ள வாகன தரிப்பிடத்தில் நடத்தப்பட்டுள்ளது. சுமார் 67 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

ஷியா (Shia)முஸ்லிம்களை இலக்கு வைத்தே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் தாக்குதலுக்கு தீவிரவாத அமைப்பு உரிமை கோரியுள்ளதாக அமாஹக் செய்தி முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.