இ.த.கட்சியை சிதைப்பதற்கோ அல்லது அதன் சின்னத்தை மாற்றியமைப்பதற்கோ ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்!!

தந்தை செல்லா நேசித்த முஸ்லிம் மக்கள் தந்தை செல்வாவை நேசிக்கின்ற முஸ்லிம் மக்கள் வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தில் நிரந்தர அரசியல் தீர்வு வருவதற்கு முஸ்லிம் மக்களும் ஒத்துழைக்க வேண்டும். இது தந்தை செல்வாவிற்கு செய்யும் நன்றியாகவே அமையும் இவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்

தந்தை செல்வாவின் 120வது பிறந்த தின நிகழ்வு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு காரியாலயத்தில் சனிக்கிழமை (31) நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் – தந்தை செல்வா முஸ்லிம் மக்களையும் இணைத்து தமிழ் பேசும் மக்கள் என்ற ரீதியிலே தனது செயற்பாடுகளை முன்னெடுத்தார். முஸ்லிம் மக்களும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பிரதிநிதிகளாகவே இருந்தார்கள்.

தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்துக்கு மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்கள் தற்போது வாக்களிப்பதில்லை. அனால் தந்தை செல்வா முதல் சம்பந்தன் ஐயா வரை பெறுகின்ற தீர்வு தமிழ் பேசும் மக்களுக்கு உகந்ததாக இருக்க வேண்டும் என்றுதான் விரும்புகின்றனர்.

தந்தை செல்லா நேசித்த முஸ்லிம் மக்கள் தந்தை செல்வாவை நேசிக்கின்ற முஸ்லிம் மக்கள் வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தில் நிரந்தர அரசியல் தீர்வு வருவதற்கு முஸ்லிம் மக்களும் ஒத்துழைக்க வேண்டும். இது தந்தை செல்வாவிற்கு செய்யும் நன்றியாகவே அமையும்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியை தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் இருந்தும் தாக்குகிறார்கள் வெளியிலுள்ள தமிழ் கட்சிகளும் தாக்குகின்றன. இவையெல்லாம் தாங்கிக்கொண்டு தந்தை செல்வா காட்டிய அகிம்சை வழியில் பயணித்துக்கொண்டிருக்கிறோம்.

எத்தனை இன்னல்கள் வந்தமாலும் இலங்கைத் தமிழரசுக் கட்சியை சிதைப்பதற்கோ அல்லது அதன் சின்னத்தை மாற்றியமைப்பதற்கோ ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்.

தந்தை செல்வா ஸ்தாபித்த இலங்கைத் தமிழரசுக் கட்சியில் தனது வாரிசைக் கொண்டுவரவில்லை. அவரது கொள்கைகளை தற்போதுள்ள தமிழரசுக் கட்சி உறுப்பினர்களும் கடைப்பிடிக்க வேண்டும்” என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]