இ.தொ.காவுக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள்

இ-தொ-கா

“உள்ளுராட்சிசபை தேர்தலில் அனைவரினதும் ஒத்துழைப்போடு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வெற்றிபெறும்” என, இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொதுச்செயலாளர் ஆறுமகன் தொண்டமான் தெரிவித்தார்.

ஹட்டன் டி.கே.டபிள்யு கலாசார மண்டபத்தில் முத்தியோர்களை சந்தித்து உரையாற்றிய போது இன்று அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு ஆறுமுகன் எம்.பி தொடர்ந்து உரையாற்றுகையில், அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களோடு ஒற்றுமையாக இணைந்து இலங்கை தொழிலாளர் காங்கிரசை கட்டிகாத்ததன் காரணமாகத்தான் இன்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பலமாக உள்ளது.

அந்தக் காலப்பகுதியில் பெருபான்மை கட்சிகளோடு இணைந்து இ.தொ.கா.பாரிய சேவையினை மக்களுக்கு ஆற்றியிருக்கிறது .

அன்று அவருடன் கைகோர்த்து இ.தொ.கா.வை எப்படி ஒத்துழைப்பு வழங்கினீர்களே அதேபோல் இன்றும் இ.தொ.கா.வுக்கு முதியவர்களாகிய நீங்கள் ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்” என்றார்.