இ.தொ.கா.வின் தேர்தல் பிரசாரத்துக்கு இடையூறு என முறைப்பாடு

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உள்ளுராட்சி சபைக்கான தேர்தல் பிரச்சாரம் கூட்டம் பொகவந்தலாவ தெரேசியா தோட்டத்தில் இன்று காலை இடம்பெற்றது.

இதன்போது, இ.தொ.கா.வின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான், தோட்டமக்கள் தொழில் புரியும் இடத்திற்கு சென்று காலை 10.30 மணிக்கு சந்தித்துள்ளார்.

இதன்போது, ஆறுமுகன் தொண்டமானின் தேர்தல் பிரச்சாரத்துக்கு தொழிலாளர் தேசிய சங்கத்தின் தோட்ட தலைவர் ஒருவரால் இடையுறு வழங்கப்பட்டதாக இலங்கை தொழிலாளர் காங்கிரசின் உபதலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான கணபதி கனகராஜ், பொகவந்தலாவை பொலிஸ நிலையத்தில் முறைபாடு செய்துள்ளார்.

அதனையடுத்து, தொழிலாளர் தேசிய சங்கத்தின் தோட்டதலைவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.