இ.தொ.காவின் பிரதி பொதுச் செயலாளராக ஜீவன் தொண்டமான் நியமனம்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவராக ஆறுமுகன் தொண்டமான் பதவியேற்றுள்ளார்.

குறித்த அறிவிப்பானது, இன்று (வியாழக்கிழமை) வெளியாகியுள்ளதோடு, இ.தொ.க. தலைமையகத்தில் நிர்வாக சபை மற்றும் தேசிய சபை ஒன்றுகூடல் நடைபெற்ற நிலையில், மேற்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

இ.தொ.க. தலைவராக செயற்பட்ட முத்துசிவலிங்கம் அப்பதவியிலிருந்து விலகியதை தொடர்ந்து, பொதுச் செயலாளராகவிருந்த ஆறுமுகன் தொண்டமான் தலைமை பதவியை பொறுப்பேற்றார்.

இந்நிலையில், இன்று முதல் ஆறுமுகன் தொண்டமான் இ.தொ.க. தலைவராக மாத்திரம் செயற்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இ.தொ.க. பொதுச் செயலாளராக அனுஷியா சிவராஜாவும், பிரதி பொதுச் செயலாளராக ஜீவன் தொண்டமான் மற்றும் உப தலைவராக பதுளை மாவட்ட மாகாண சபை உறுப்பினர் சிவலிங்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]