பிரிட்டன் நாடாளுமன்றம் அருகே தாக்குதல்களுடன் இஸ்லாமிய இயக்கங்களுக்கு தொடர்பு இருக்கலாம் லண்டன் போலீசார் தெரிவித்துள்ளனர்

நேற்று (புதன்கிழமை) வெஸ்ட்மினிஸ்டர் பாலம் மற்றும் நாடாளுமன்ற அவைகளுக்கு வெளியே நடந்த தாக்குதல்களுடன் இஸ்லாமிய இயக்கங்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று லண்டன் போலீசார் தெரிவித்துள்ளனர்.
பிரிட்டிஷ் நாடாளுமன்ற வளாகத்தில் “பயங்கரவாத தாக்குதல்”: ஐவர் பலி; 40 பேர் காயம்
தாக்குதல்தாரியின் அடையாளத்தை தாங்கள் அறிந்திருப்பதாகவே கருதுவதாக தெரிவித்த லண்டன் பெருநகர பயங்கரவாத எதிர்ப்பு காவல்துறை தலைவர் மார்க் ரோவ்லி, இது குறித்து மேலதிக தகவல்களை தெரிவிக்கவில்லை.
வெஸ்ட்மினிஸ்டர் பாலத்தில் சென்று கொண்டிருந்த பாதசாரிகள் மீது ஒரு கார் மோதிய போது, மூவர் கொல்லப்பட்டுட்டுள்ளனர். மேலும், இந்த சம்பவத்தில் 40-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
பின்னர், காரில் இருந்த அந்த தாக்குதல்தாரி நாடாளுமன்ற வளாக மைதானத்துக்கு சென்று தான் சுடப்படுவதற்கு முன்னர் அங்கு இருந்த ஒரு போலீஸ்காரரை கத்தியால் குத்தினார்.
இந்த தாக்குதலை ஆரோக்கியமற்ற மற்றும் இழிவான தாக்குதல் என்று பிரிட்டன் பிரதமர் தெரீசா மே வர்ணித்துள்ளார்.

பிரிட்டன் நாடாளுமன்ற தாக்குதல்: படங்களில்

  இஸ்லாமிய இயக்கங்களுக்கு

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – i[email protected]