இஸ்ரேல் பிரஜைகள் மீது தாக்குதல்; இளைஞன்கைது

வெலிகம மிதிகம பிரதேசத்தில் இஸ்ரேல் நாட்டு பிரஜைகளை தாக்கிய குற்றச்சாட்டில் சந்தேக நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இஸ்ரேல் நாட்டு பிரஜைகள் ஐந்து பேரை, தடி மற்றும் கைகளால் தாக்கி காயம் ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு பிரஜையான பெண், கடலில் அலைச்சறுக்கல் விளையாட்டில் ஈடுபட்டுள்ளார். அதன்போது, முகுதுகம் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞனின் கையில் அலைச்சறுக்கல் பலகை மோதி காயம் ஏற்பட்டுள்ளது.

காயத்துக்கு மருத்துவம் செய்வதற்காக குறித்த இளைஞன் பணம் கேட்ட நிலையில், அங்கு வந்த இஸ்ரேல் பிரஜைகளுடன் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

அதனையடுத்து, இரு தரப்புக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளதுடன், அங்கு வந்த குழுவினர், இஸ்ரேல் பிரஜைகள் மீது தாககுதல் மேற்கொண்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]