இஷா அம்பானியின் தனிப்பட்ட மொத்த சொத்து மதிப்பு எத்தனை ஆயிரம் கோடி தெரியுமா?

இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி. இவரின் மகள் இஷா, பிரபல ரியல் எஸ்டேட் அதிபரான அஜய் பிராமலின் மகன் ஆனந்த் இவர்களின். நிச்சயதார்த்தம் இத்தாலியில் மிகவும் பிரமாண்டமாக அரண்மனை செட்டப்பில் வடிவமைக்கப்பட்டு நடந்தது. இந்த நிச்சயதார்த்தத்தின் செலவு மட்டும் 26 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவர்களின் திருமணம் அடுத்த மாதம் நடைப்பெறவுள்ளது.

முகேஷ் அம்பானி தனது மகள் இஷாவுக்கு தங்கத்தால் வடிவமைக்கப்பட்ட ஆடை மற்றும் சவுதியில் இருந்து தங்க முலாம் பூசப்பட்ட காரினையும் பரிசளிக்கவுள்ளார். ஆடம்பரங்களுக்கு சொந்தக்காரரான இஷா அம்பானி ஆசிய பெண் வணிகர்களில் 12ம் இடத்தில் உள்ளார்.

இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரர் அம்பானியின் மகளாக இவர் இருந்தாலும் இவருக்கான தனி வர்த்தகங்களும் உண்டு.

ரிலையன்ஸ் ஜியோவின் நிர்வாக இயக்குனராக இஷா அம்பானி உள்ள நிலையில் இவரது தனிப்பட்ட மொத்த சொத்து மதிப்பு 4,710 கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது.

ஜியோவின் போர்டு உறுப்பினராக 2014-ம் ஆண்டுச் சேர்ந்த இஷா அம்பானி ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தினை நிர்வகித்து வருகிறார்.

2015 ஆம் ஆண்டு முதல் தங்கள் ஜியோ வணிகத்தினை இஷா கவனித்து வருகிறார்.

26 வயதான ஈஷா அம்பானி 2008 ஆம் ஆண்டு இளமையான ஃபோர்ப்ஸ் பில்லியனர்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]