இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே- நம்முடைய கண்கள் துடித்தால் இதுதான் காரணமாங்க

எல்லாருக்குமே திடீரென கண்கள் சில சமயங்களில் துடிக்கும். வலது கண் துடித்தால் கெட்டது என்றும் இடது கண் துடித்தால் நல்லது என்றும் நாமாகவே கண்களை கூட விட்டு வைக்காமல் ஜோதிடம் பார்த்துவிடுகிறோம்.

கண்கள் துடிப்பது நல்லது என்று கூற முடியாது. வேண்டுமானால் கெட்டது என்றே கூறலாம். காரணம் என்னவென்றால் நமது கண்கள் துடிப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.

சாதாரண தூக்கமின்மையில் தொடங்கி, மூளை சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகள் வரை கண்கள் துடிப்பதற்கு பின் நிறைய காரணங்கள் உள்ளன.

கண்கள் துடிப்பது எதனால் ஏற்படுகிறது என்று பார்ப்போம்….

நமது உடலில் உள்ள புறநரம்புகளின் இயல்புக்கு மீறிய மிகையான தூண்டலின் காரணமாக சில சமயங்களில் நரம்புகளும், அதனைச் சார்ந்த தசைகளும் துடிக்கும்.

சரி……..கண்கள் துடிப்பதன் பலன்கள் என்று சொல்கிறார்களே அதையும் என்ன என்றுதான் பார்ப்போமே….

வலது புருவம் துடித்தால் :- பணவரவு.

இடது புருவம் துடித்தால் :- குழந்தை பிறப்பு, கவலை.

புருவ மத்தி துடித்தால் :- பிரியமானவருடன் இருத்தல்.

கண் நடுபாகம் துடித்தால் :- மனைவியை பிரிந்திருத்தல்.

வலது கண் துடித்தால் :- நினைத்தது நடக்கும்.

இடது கண் துடித்தால் :- மனைவியை பிரிந்திருத்தல், கவலை.

வலதுகண் இமை துடித்தால் :- சந்தோஷமான செய்தி வரும்.

இடது கண் இமை துடித்தால் :- கவலை.

இதெல்லாம் பலன்களாக கூறப்பட்டு வருகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]