இவற்றை கனவில் கண்டால் என்ன பலன் தெரியுமா?

பகல் கனவு பழிக்காது என்பார்கள். அதே போல் நாம் இரவில் காணும் கனவுகளுக்கு நல்லது தீயது என பலன்கள் உண்டு. என்ன கனவு வந்தால் என்ன பலன் என பார்க்கலாம்.

காளை மாடு துரத்துவது போல் கனவுவந்தால், வீண் பிரச்னைகள் வந்துபோகும்.

பாம்பு கனவில் வந்தால், பெரிய அளவில் நமக்குத் தொல்லை தந்து வந்த கடன் பிரச்சினைகள் நம்மை விட்டு விலகும்.

நரி கனவில் வந்தால் சொந்த ஊரை விட்டுச் சென்று வேறு ஊரில் பிழைப்பு நடத்த வேண்டி வரும்.

கனவில் முயல்கள் துள்ளிக்குதித்து விளையாடுவது போல் கனவு வந்தால், நாம் சொந்த ஊருக்குச் சென்று நம் உறவினர்களைச் சந்திப்போம். இல்லாவிட்டால் அவர்கள், நம்மைப்பார்க்க வரப்போகிறார்கள் என்று பொருள்.

குதிரை கனவில் வந்தால், வழக்குகளில் வெற்றி கிடைக்கும். குதிரையின் மீது ஏறி சவாரி செய்வது போல் கனவு வந்தால் நமக்கு வெளிநாட்டுக்குச் செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும்.

பசுக்கள் மேய்ச்சல் நிலத்தில் மேய்வது போலக் கனவுகள் வந்தால், புதிய சொத்துக்கள் வாங்குவோம்.

புலி, சிங்கம் போன்ற வனவிலங்குகளை நாம் வேட்டையாடி வெற்றி பெறுவதுபோல் கனவு வந்தால் நமக்கு வந்த எதிர்ப்புகளை முறியடித்து நாம் வெற்றி பெறப்போகிறோம் என்று அர்த்தம்.

ஆடுகள் நம் கனவுகளில் வந்தால் புதிதாகக் காரோ, பைக்கோ வாங்கப்போகிறோம் என்று நாம் அறியலாம்.

நாய்கள் குரைப்பது போல் கனவு வந்தால் வீண்பழி வந்து சேரும்.

குரங்குகள் கனவில் வந்தால் வீட்டிலோ, நண்பர்களிடமோ தேவையற்ற வாக்குவாதங்கள் வரும். கடன் பிரச்னை அதிகரிக்கும்.

யானை நமது கனவில் வந்தால் நமக்குப் பெரும் செல்வம் ஏதோ ஒரு வகையில் கிடைக்கப் போகிறதென்று பொருள். யானையின் மீது உட்கார்ந்துகொண்டு சவாரி செய்வது போல் கனவு வந்தால் நமக்குப் பதவி உயர்வு கிடைக்கலாம். சொந்தமாக வீடு வாங்கும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கலாம்.

மயில் அகவுவது போல் கனவு வந்தால், கணவன் மனைவி இடையே அன்பு மிகுதியாகும். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.

வானத்தில் கூட்டமாகப் பறவைகள் பறந்து செல்வது போல் கனவுகள் வந்தால் நெடுநாட்களாக நமக்கு இருந்து வந்த துன்பம் நம்மை விட்டு விலகும். புதிய பதவி தேடி வரும். புகழ் கூடும்.

கிளிகள் பறந்து மரத்துக்கு மரம் செல்வதுபோலக் கனவு கண்டால், பால்ய நண்பர்களைச் சந்தித்து உரையாடுவீர்கள். மனம் ரொம்பவே லேசாகிப்போகும். புதிய உற்சாகத்துடன் செயல்படுவீர்கள்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]