இவங்க எல்லாம் கடின உழைப்பாளிங்கலாம்! உங்க ராசியும் இதுல இருக்கா?

மேஷ ராசி

எப்போதும் உற்சாகத்துடன், ஆற்றலுடன், ஆர்வமுடம் இருப்பவர் மேஷ ராசியினர். இவர்கள் அடிக்கடி கனவு காண மாட்டார்கள். ஆனால் ஒரு முறை ஒரு செயலைச் செய்ய வேண்டும் என்று மனதில் நினைத்து விட்டால் முடிந்த அளவிற்கு துரிதமாக செயல்பாட்டில் இறங்கி விடுவார்கள்.

கடின உழைப்பைத் தவிர வேறு எந்த வழியாலும் தனது குறிக்கோளை அடைய முடியாது என்பதை நன்கு உணர்ந்து, அவர்கள் வேலையை சிறப்பாக செய்து முடிப்பார்கள். குறிக்கோளில் வெற்றியும் காண்பார்கள். மேஷ ராசியினருக்கு தங்கள் மனதில் ஆயிரம் கேள்விகள் எழும். விடை தெரியாத கேள்விகள் அவர்களை தூங்க விடாமல் செய்யும். இவர்கள் பிடிவாத குணமும், இவர்களுடைய இந்த பழக்கத்திற்கு கூடுதல் சிறப்பைப் பெற்றுத் தரும்.

ரிஷப ராசி

ரிஷப ராசியினர் பொறுமைசாலிகள். அவர்கள் விரும்பிய தீர்வுகள் கிடைக்கும்வரை காத்திருப்பார்கள். மேஷ ராசியினர், எந்த ஒரு காரியத்தையும், குறிப்பிட்ட காலகட்டத்திற்கு முன்னதாகவே செய்து முடிக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

ஆனால் இவர்களைப் போல இல்லாத ரிஷப ராசியினர், கால தாமதம் ஏற்பட்டாலும் நிச்சயம் நேர்மறை விளைவுகளும் வரும் என்ற நம்பிக்கையுடன் தங்கள் திட்டத்தை செயல்படுத்துவார்கள்.

மிதுன ராசி

மிதுன ராசியினர் எல்லாவற்றையும் தர்க்கம் மற்றும் காரணம் அடிப்படையில் நம்புவார்கள். எதையும் சரியாக யோசிப்பார்கள்.

ஒரு செயல்பாட்டை எப்படியெல்லாம் செய்ய முடியும் என்பது குறித்த தெளிவு அவர்களுக்கு உண்டு. ஒரு செயல் எந்த நேரம் முழு வடிவம் பெறும் என்பதை தெரிந்து வைத்திருப்பார்கள். யாராவது ஒருவர் குறுக்கு வழியில் அல்லது சாமர்த்தியமாக அல்லது பொய் சொல்லி குறிக்கோளை அடைந்துவிட்டால்

கன்னி ராசி

எந்த ஒரு மர்மமும் கன்னி ராசியினரை அதிகம் கவரும். ஒரு ரகசியத்தைக் கண்டுபிடிக்க மிகவும் ஆழமாக யோசிப்பார்கள். மேலும், அவர்கள் விரும்பிய பொருள் கிடைக்க வேண்டும் என்பதற்காக அதிகம் கவலைப்படுவார்கள்.

குறிப்பாக, ஷாப்பிங் செல்கையில், அவர்களுக்குப் பிடித்த பொருளைப் பார்த்துவிட்டால் அதனை வாங்காமல் வருவதற்கு மனசே வராது. என்ன ஆனாலும், அந்த பொருளை ஒரு முறையாவது வாங்கி விடுவார்கள்.

சிம்ம ராசி

தைரியமாக இருப்பது மற்றும் ஒரு பிரச்னைக்கு தீர்வு காண்பது போன்றவை சிம்ம ராசியினரின் உயர்வான பண்புகளாகும். ஒரு விஷயத்தில் தைரியத்தால் வெற்றி அடைந்த பின் அந்த வெற்றியைக் குறித்து மற்றவர்களிடம் பெருமையாகப் பேசிக் கொள்வது இவர்களின் ஒரு பழக்கம்.

எந்த ஒரு செயல் சவாலாக தோன்றுகிறதோ, அது இவர்களை மிகவும் கவரும். இந்த செயல் எளிதோ அல்லது கடினமோ, அதனை முழுவதும் முடிக்காமல் பாதியில் விடும் பழக்கம் சிம்ம ராசியினருக்கு சுத்தமாக கிடையாது.

அதனை இவர்களால் ஜீரணிக்கவே முடியாது. இவர்கள் மட்டும் கடின உழைப்பாளிகள் அல்ல, மற்றவர்களும் இதே வழியில் நடக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.

மகர ராசி

எப்போதும் கனவு காண்பவர்கள். ஆனால் எதிலும் கவனமாகவும் நடைமுறையை விளங்கிக் கொள்பவருமாக இருப்பார்கள். இவர்களுடைய குறிக்கோள் மிகவும் உயர்வானதாக இருக்கும்.

அந்த குறிக்கோளை அடைவதற்காக இரவும் பகலும் உழைப்பார்கள். முடிந்த அளவிற்கு கடுமையாக உழைத்து, எல்லா விதமான கவனச் சிதறல்களையும் அழித்து, வேலையில் மிகவும் ஆக்ரோஷமாக இறங்குவார்கள். எல்லா பிரச்சனைக்கும் தீர்வு உண்டு என்பதை புரிந்து கொள்வார்கள்.

மகர ராசியினர் பொதுவாக உயர் பதவியை அடையவும், பிறக்கும்போதே தலைவராகும் தகுதி கொண்டவராகவும் இருப்பதற்கு இதுவே காரணம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]