இவங்க இதற்காகத்தானா பச்சை குத்தியிருக்காங்க!!

பச்சைக் குத்துவது என்பது காலம், காலமாக இருக்கும் கலாச்சாரம். இப்போது கடந்த பத்து வருடங்களாக டாட்டூக் குத்துவது ஃபேஷனாகி வருகிறது. ஏதாவதொரு டிசைனை டாட்டூவாக குத்துவதற்கு பதிலாக அதற்குள் ஒரு அர்த்தம், ஒரு புதிர் என தற்போதைய இளைஞர்கள் டாட்டூக்கள் குத்துகிறார்கள்.

இதற்கு திரை பிரபலங்கள் மட்டும் விதிவிலக்கல்ல. தங்களுக்கு பிடித்தவர்கள், பிடித்த விஷயம், காதல் என பல வகைகளில், பல அர்த்தங்கள் கொண்டு டாட்டூக்கள் தமிழ் நடிகைகள், பிரபலங்கள் சிலரும் குத்தியிருக்கிறார்கள். அவர்களின் டாட்டூக்கள் மற்றும் அதன் அர்த்தங்களை பார்ப்போம்.

  • நயன்தாரா

வாழ்க்கையில் வெற்றி, தோல்வி, இன்ப, துன்பங்கள் சம அளவு எதிர்கொண்டவர் நயன்தாரா. காதல் தோல்விகளை கடந்து தனது திறமையால் இன்று ரசிகர்களாலும், திரை பிரபலங்களாலும் லேடி சூப்பர்ஸ்டார் என்று புகழப்படுகிறார் நயன்தாரா. இதற்கு எல்லாம் காரணம் அவரிடம் குறையாமல் இருக்கும் பாசிட்டிவிட்டி தான். அதையே தனது கைகளில் டாட்டூவாக குத்தி இருக்கிறார் நயன்தாரா. இதற்கு முன் இவர் பிரபு தேவாவை காதலித்து வந்த போது அவரது பெயரை டாட்டூவாக குத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • ஓவியா!

பிக் பாஸ் மூலம் மக்கள் மத்தியில் நல்ல பெயர் எடுத்தார் ஓவியா. அதற்கு காரணம் அவர் உண்மையாக நடந்து கொண்டது தான். பல பேட்டிகளில் உங்களுக்கு யாரை பிடிக்கும் என்று கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தனது அம்மாவை பிடிக்கும், மேலும் என்னையே எனக்கு மிகவும் பிடிக்கும் என்று செல்ஃப் லவ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தியிருப்பவர் ஓவியா. இதையே தனது டாட்டூ மூலமாகவும் வெளிப்படுத்தியுள்ளார் ஓவியா. ஓவியா தனது தோளில் தனது முகத்தையே பச்சையாக குத்தியிருக்கிறார்.

  • சமந்தா!

சென்னையில் பிறந்த சமந்தா பானா காத்தாடியில் பெரிதாக கவனம் ஈர்க்க தவறியவர். நீதானே என் பொன் வசந்தம், நான் ஈ, கத்தி, தெறி, மெர்சல் என ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் சமந்தா. இவர் தனது முதுகுப்புறம் கழுத்தின் கீழே யூ அண்ட் மீ என ஆங்கிலத்தில் பச்சைக் குத்தியுள்ளார். மேலும், இவரும் நாக சைதன்யாவும் தங்கள் கைகளில் ஒரே மாதிரியான சிறிய டாட்டூவும் குத்தியுள்ளனர்.

  • ஜனனி ஐயர்!

நிறைய படங்கள் நடிக்காவிட்டாலும், தான் நடித்த சில படங்களின் கதாபாத்திரங்கள் மூலம் தனக்கான தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர் ஜனனி ஐயர். ஜனனி தனது கையில் விநாயகர் வடிவில் ஓம் என்ற எழுத்தை பச்சையாக குத்தியுள்ளார்.

  • சூப்பர்ஸ்டார் மகள்!

எதிர்பாராத விதமாக விவாகரத்து பெற்ற சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது செல்லமான, பாசமான அப்பா, அம்மா பெயரையே ஆங்கிலத்தில் டாட்டூவாக பெரியளவில் தனது கையில் பச்சையாக குத்தியுள்ளார்.

  • நிக்கி கல்ராணி!

பெரிதாக ஆராவாராம் இல்லாமல் பெரியாளாகி வருகிறார் நிக்கி கல்ராணி. மிடில் ரேஞ்சில் இப்போது இவரை விட்டால் வேறு நடிகைகளே இல்லை. நிக்கி தனது முதுகில் தன் தங்கை அர்ச்சனாவின் பெயரை டாட்டூவாக குத்தியிருக்கிறார். இது அவர் மீது தான் கொண்டிருக்கும் அன்பின் வெளிபாடு என்றும் கூறுகிறார் நிக்கி.

  • ஷ்ருதி ஹாசன்!

அப்பாவை போலவே பன்முக திறமை கொண்டவர் ஷ்ருதி. நடிப்பு, இசை, நடனம், பாடல் என அனைத்திலும் கலக்கும் ஷ்ருதி தமிழை காட்டிலும் தெலுங்கில் நல்ல நடிகையாக பெயர் எடுத்துள்ளார். இவர் தனது முதுகில் தனது பெயரையே தமிழில் டாட்டூவாக குத்தியுள்ளார். இதன் மூலம் ஏழாம் அறிவில் வசனமாக மட்டும் பேசாமல், நிஜமாகவே தனக்கு தமிழ் மீது உள்ள பற்றினை வெளிபடுத்தியுள்ளார் ஷ்ருதி.

  • அமலா பால்!

    இயக்குனர் விஜயை காதலித்து திருமணம் செய்து கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தவர் அமலா பால். இவர் தனது முதுகில் பெரியதாக பூ போன்ற ஒரு டிசைனை பச்சைக் குத்தியுள்ளார். மேலும், காலில் ஒருபுறம் இறகு, ஒருமுனையில் இறகு கொண்ட அம்பு ஒன்று ஒரு வட்டத்திற்குள் பாய்ந்து செல்வது போன்ற டிசைனை பச்சைக் குத்தியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]