இளைய தளபதி விஜய் 61 அட்லி இயக்கத்தில் இசைப்புயல் A.R.ரஹ்மான் இசையில் 100 வது படம்

இளைய தளபதி விஜய் 61 வது திரைப்படம் அட்லி இயக்கத்தில் பலத்த எதிர்பார்ப்புகளுடன் தயாராகி வருவது அனைவரும் அறிந்ததே.
இராமநாராயணின் ஆசியுடன்  தேனாண்டாள் ஸ்டுடியோஸ் லிமிடட் தயாரிக்கும் 100வது படமாக வளர்ந்து வரும் இந்த திரைப்படத்தில் விஜய்யுடன் எஸ்.ஜே.சூர்யா,  காஜல்அகர்வால், சமந்தா, நித்யாமேனன், வடிவேல், கோவைசரளா, சத்யன் ஆகியோருடன் சத்யராஜ் மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.
இளைய தளபதி விஜய் 61
சென்னையில் பிரம்மாண்டமான பல அரங்குகள் அமைக்கப்பட்டு முக்கிய நடிகர் நடிகையர் பங்கு பெறும் காட்சிகள்  படமாக்கப்பட்டு வருகின்றன.
இதன் முக்கியமான பல காட்சிகள் ஐரோப்பாவிலும் படமாக்கப்படவுள்ளன.
இப்படத்தின் FIRSTLOOK (முதல்பார்வை) இளையதளபதி விஜய்யின் பிறந்த நாளான ஜுன் மாதம் 22ம் தேதி வெளியிடப்பட இருக்கிறது.
இதன் ஆடியோ வெளியீட்டுவிழாவை ஆகஸ்ட்மாதம் பிரம்மாண்டமாக நடத்த  ஆயத்த வேலைகள் நடைபெற்று வருகிறது.
ஏ.ஆர். ரகுமான் இசையில் கவிஞர் விவேக் பாடல்கள்  எழுத  ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவையும், ரூபன் படத்தொகுப்பையும், அனல்அரசு சண்டைபயிற்சியையும், விஜயேந்திரபிரசாத் மற்றும் ரமணகிரிவாசன் இருவரும் திரைக்கதையையும்,  ஷோபி நடனபயிற்சியையும் கவனிக்கின்றனர்.
அக்டோபர் மாதம் உலகமெங்கும் வெளிவர பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை தேனாண்டாள் ஸ்டுடியோஸ் லிமிடட் சார்பில் முரளிராமசாமி தயாரிக்கிறார்.
இப்படத்தை அட்லி கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்கி வருகிறார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]