இளையோர் ஒலிம்பிக் போட்டியில் இலங்கை வீராங்கனைக்கு பதக்கம்

இளையோர் ஒலிம்பிக் போட்டியில் இலங்கை வீராங்கனைக்கு பதக்கம்

ஆர்ஜன்டீனாவில் இடம்பெற்று வரும் இளையோர் ஒலிம்பிக் போட்டியில் இலங்கை வீராங்கனையான பரமி வசந்தி மாரிஸ்டெல்லா வெண்கல பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.

நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற 2 ஆயிரம் மீட்டர் தடை தாண்டல் பந்தயத்தில் அவர் இந்தப் பதக்கத்தை வென்றுள்ளார்.

இளையோர் ஒலிம்பிக் போட்டி ஒன்றில் இலங்கை வீராங்கனை ஒருவர் பதக்கம் வெல்லும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

இந்தநிலையில் வெண்கலப்பதக்கம் வென்றுள்ள பரமி வசந்தி மாரிஸ்டெல்லாவிற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]