இளையராஜா பாடிய மாரியின் ஆனந்தி பாடல் வீடியோ வெளியானது

தனுஷ் மற்றும் சாய் நடிப்பில் வெளியான மாரி 2 படத்தின் ரவுடி பேபி பாடல் இணையத்தை கலக்கி வரும் நிலையில் தற்போது இந்த படத்தில் இளையராஜா பாடிய மாரியின் ஆனந்தி பாடல் வீடியோ வெளியாகி உள்ளது.

மாரி படத்தின் இரண்டாம் பாகமாக கடந்த மாதம் திரைக்கு வந்த படம் மாரி 2. தனுஷ் நாயகனாக நடித்த இந்தப் படத்தில் சாய் பல்லவி, வரலட்சுமி சரத்குமார், டொவினோ தாமஸ், ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பாலாஜி மோகன் இயக்கிய இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. 10 ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ் – யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி இந்தப் படத்தின் மூலம் இணைந்து ரசிகர்களுக்கு இசை விருந்து அளித்திருந்தனர்.

இந்த படத்தின் ரவுடி பேபி பாடல் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்து யூடிப்யூப்பில் கலக்கி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் இளையராஜா பாடிய மாரியின் ஆனந்தி பாடலின் வீடியோ வெளியாகி உள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]