இளையதளபதி படத்திற்க்கு இது மட்டும் பொருந்துமா?

இளையதளபதி விஜய் நடித்த ‘பைரவா’ படம் ஏற்கனவே ‘யூ’ சான்றிதழ் பெற்றுள்ள நிலையில் தற்போது வரிவிலக்கிற்காக விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. வரிவிலக்கு தரும் குழுவினர்களிடம் இருந்து நல்ல செய்தி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ‘பைரவா’ படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்தின் முதல் பாதி ஒரு மணி நேரம் 22 நிமிடங்களும், இரண்டாவது பாதி ஒரு மணி நேரம் 28 நிமிடங்களும், ஆக மொத்தம் இந்த படத்தின் மொத்த நேரம் 2 மணி நேரம் 50 நிமிடங்கள் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன .

கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் இந்த படம் ஓடினாலும் சுவாரஸ்யமாக இருக்கும் பட்சத்தில் விஜய் ரசிகர்கள் உட்பட அனைத்து தரப்பினர்களும் படத்தின் நீளத்தை நிச்சயம் பெரிதாக கருத வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.