இளையதளபதியுடன் மீண்டும் இணையும் எஸ்.ஜே.சூர்யா.

இளையதளபதியுடன் மீண்டும் இணையும் எஸ்.ஜே.சூர்யா.

இளையதளபதி விஜய் நடிப்பில் எஸ்.ஜே.சூர்யா இயக்கிய குஷி திரைப்படம் கடந்த 2000ஆம் ஆண்டு வெளிவந்து நல்ல வெற்றியை பெற்றது. இந்த படம் வெளிவந்து 16 ஆண்டுகள் ஆகியுள்ளபோதிலும் மீண்டும் அவர் விஜய்யுடன் இணையவில்லை. விஜய்யின் ‘நண்பன்’ படத்தில் எஸ்.ஜே.சூர்யா  நடித்திருந்தாலும்  இருவரும் இணைந்து வருகின்ற  காட்சிகள் இல்லை. ஆனால் விரைவில் விஜய் படத்தை எஸ்.ஜே.சூர்யா இயக்கவுள்ளதாக அவ்வப்போது செய்திகள் மட்டும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் விஜய் நடிக்கவுள்ள 61வது படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன . ஏற்கனவே எஸ்.ஜே.சூர்யா, மகேஷ்பாபு-முருகதாஸ் படத்தில் வில்லனாக நடித்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தில் அவர் நடித்தால் அவருக்கு என்ன கேரக்டராக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஏற்கனவே ‘விஜய் 61’ படத்தில் ஜோதிகா, காஜல் அகர்வால், சமந்தா ஆகிய மூன்று நாயகிகள் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.