இளையதளபதியின் ரசிகர்கள் செய்த மாபெரும் சாதனை.

இளையதளபதியின் ரசிகர்கள் செய்த மாபெரும் சாதனை. மெர்சல் இசை வெளியீட்டுவிழாவை ரசிகர்கள் தீபாவளி போன்று கொண்டாடினார்கள். அப்படக்குழுவினரே நினைத்துப்பார்க்காதளவுக்கு ரசிகர்களின் கூட்டம் நேரு உள்ளகவிளையாட்டரங்கெங்கும் தலைகளாகவே தென்பட்டது.

 இளையதளபதியின் ரசிகர்கள்
mersal -vijay

அவர்களின் கரகோஷங்கள் விண்ணையும் தாண்டிப் போகுமளவுக்கு இருந்தது. ஓர் நடிகர்ப் பட்டாளமே இவ்விழாவில் கலந்து கொண்டனர். விஜய் நினைத்தாப்போலவே பெரியத்திடல், ரசிகர்களுக்கு முன்னுரிமை.

இளையதளபதியின் ரசிகர்கள்
mersal – vijay

இப்படத்தின் பாடல்களில் தமிழரின் பண்பாடு, கலாசாரம் ஆகியவை பற்றிக் கூறித் தமிழர்களைப் பெருமைப்படுதியுள்ளார்.

இளையதளபதியின் ரசிகர்கள்
mersal – vijay

மறுபக்கம் பார்த்தால் படத்தின் சாதனைப் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. ட்விட்டரில் #மெர்சல் எனும் வார்த்தை 100kயை இன்னும் இரு தினங்களில் எட்டிவிடும். இவ்வாறு அம் மைல்கல்லைத் தொட்டுவிட்டால், அது தமிழ்சினிமாவில் எப்படமும் படைக்காத சாதனையைப் படைக்கும் என்பது உண்மை.

இளையதளபதியின் ரசிகர்கள்
mersal – vijay

இன்னொருச் சிறப்பம்சம் என்னவென்றால் ட்விட்டர்ப் பக்கம் மெர்சல் படத்துக்கென்று ஓர் இமோஜியை நேற்று வெளியிட்டிருந்தது. இதுவே தளபதியின் சிங்கங்கள் செய்த மாபெருஞ் சாதனையாகும். இன்னும் இரு கிழமைகளில் படத்தின் டீஸர் வெளிவரயிருக்கிறது. சொல்லவாவேண்டும் பட்டையக் கிளப்பிடுவாங்க.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]