இளையதளபதியின் ‘பைரவா’வுக்கு ஏற்பட்டுள்ள திடீர் சிக்கல்?

 

 

இளையதளபதியின் ‘பைரவா’வுக்கு ஏற்பட்டுள்ள  திடீர் சிக்கல்?

இளையதளபதி விஜய்யின் ‘பைரவா’ திரைப்படம் உலகம் முழுவதும் பிரமாண்டமாக  பொங்கல் திருநாளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் டீசர், பாடல்கள், மற்றும்  டிரைலர் ஆகியவை மிகப்பெரிய வரவேற்பை பெற்றதால் இந்த படத்தின் வசூலும் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கேரளாவில் திரையரங்கு உரிமையாளர்களுக்கும், தயாரிப்பாளர்கள்-விநியோகிஸ்தர்களுக்கும் இடையே வருவாயை பிரிப்பதில் கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த பேச்சுவார்த்தை சமீபத்தில் தோல்வி அடைந்ததால் நத்தார்  மற்றும் புத்தாண்டுக்கு வெளிவர வேண்டிய புதிய படங்கள் வெளியாகவில்லை. இதனால் பல மலையாள படங்கள் வெளியாகாமல் உள்ளன.

இந்நிலையில் வருகின்ற  10ஆம் திகதி  மீண்டும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும், விநியோகிஸ்தர்களுக்கு பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என்றால் பொங்கல் தினத்தில் வெளியாகும் புதிய திரைப்படங்களை தியேட்டர் அதிபர்கள் வெளியிடாமல் போராட்டம் நடத்த வாய்ப்பு உள்ளது.

விஜய்க்கு தமிழகத்தை போலவே கேரளாவில் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருப்பதால் வரும் பொங்கல் தினத்தில் ‘பைரவா’ திரைப்படம் இந்த பிரச்சனையால் கேரளாவில் வெளிவருமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. இருப்பினும் 10ஆம் திகதி  பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்ற நம்பிக்கையில் விஜய் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.