அரசாங்கத்தின் இலக்கு இளைஞர், யுவதிகளுக்கு சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுப்பதே

இளைஞர், யுவதிகளுக்கு சிறப்பான எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுப்பதையே அரசாங்கம் பொறுப்பாகக் கொண்டுள்ளது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாட்டில் பயங்கரவாதம் ஏற்படுவதற்கு இடமளிக்காத வகையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டும் என்றும் கூறியுள்ளார்.
பிரதமர் காலி நெலும் ஹப்பிட்டிய ரிதிதரு இளைஞர்களால் அமைக்கப்பட்ட பாலத்தை நேற்றுக் காலை பார்வையிட்டார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

ரணில் விக்கிரமசிங்க
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

அவர் மேலும் கூறியதாவது,

நாட்டின் கல்வித்துறையில் விரைவாக அபிவிருத்தி ஏற்படுத்தப்படும். தரம் 13 வரையிலான கல்வி கட்டாயமாக்கப்படும். வருமானத்திற்கான வழிவகைகள் செய்யப்பட்டுள்ளதுடன், இளைஞர் யுவதிகளின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்த அரசாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றது. இந்த வேலைத்திட்டங்கள் தென்மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இளைஞர்களால் அமைக்கப்பட்ட இந்த பாலத்தை அமைப்பதற்காக 35 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது. தேசிய இளைஞர் சேவைகள் மன்றும் நாடுதழுவிய ரீதியில் முன்னெடுத்துள்ள 1,500 திட்டங்களில் முதலாவது இடத்திற்கு இந்தத் திட்டம் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திட்டத்திற்காக வழங்கப்பட்ட மானியத்திற்கு மேலதிகமாக 5 மடங்கு மானியங்களைப் பயன்படுத்தி வெற்றிகரமாக இந்தத் திட்டத்தை நிறைவு செய்வதற்காக அரச ஒப்பந்தங்கள் இந்த இளைஞர்களக்கு வழங்கப்படும் என்றும் கூறினார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]