இளைஞன் சுட்டுக்கொலை

ஹிக்கடுவை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப்பிரயோகத்தில் இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இனந்தெரியாத நபரொருவரினால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பல்வேறு கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய நபரொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த நபரொருவர் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை, இந்த துப்பாக்கிப்பிரயோகத்தில் 29 வயதுடைய நபர் ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

துப்பாக்கி பிரயோகத்துக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்டினெடுத்து வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]