இளைஞன் சடலமாக மீட்பு

புஸ்ஸல்லாவை, வகுகபிட்டிய, பாலவல பிரதேசத்தில் ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞன், சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

24 வயதுடைய இளைஞனே இன்று காலை இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞன், இன்று காலையில், தனது இரண்டு சகோதரர்கள் ஆற்றுக்கு நீராடச் சென்றுள்ளார்.

குறித்த இளைஞன் நீண்ட நேரமாக வீடு திரும்பாத நிலையில், உறவினர்கள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது, இளைஞன் சடலமாக ஆற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து புஸ்ஸல்லாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை, மேற்கொண்டு வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]