இளைஞனை அடித்து கொன்றுவிட்டு; சடலத்தை கிணற்றில் வீசிய கொடூரம்

இளைஞனை அடித்து கொன்றுவிட்டு; சடலத்தை கிணற்றில் வீசிய கொடூரம்

இளைஞனை அடித்து கொன்று விட்டு; சடலத்தை கிணற்றில் வீசிய கொடூரமான சம்பவம் யாழ் சண்டிலிப்பாயில் நடந்துள்ளது.

“3 நாள்களாக காணாமல் போயிருந்த இளைஞன் வயல் கிணற்றிலிருந்து சடலமாக மீடகப்பட்டார். அவரது சடலத்தில் அடிகாயங்கள் காணப்படுகின்றன. இளைஞன் கொலை செய்யப்பட்ட பின்னரே கிணற்றில் போடப்பட்டுள்ளார்” என்று மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தார்.

சண்டிலிப்பாயைச் சேரந்த ஆனந்த ராஜா ஆனந்த பாபு (வயது -20) என்ற இளைஞனே சங்குவேலி வயல் கிணறொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

‘அவரை கடந்த 2 ஆம் திகதி தொடக்கம் காணவில்லை என உறவினர்கள் தெரிவித்தனர். கூலி வேலைக்குச் செல்பவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. சடலம் மல்லாகம் நீதிவானின் உத்தரவுக்கமைய உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. அவரை அடித்துக்கொலை செய்தவர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறோம் என மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்’.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]