இளைஞனின் சடலம் மாட்டுப் பட்டியடியிலிருந்து மீட்பு

இளைஞனின் சடலம்

இளைஞனின் சடலம் மாட்டுப் பட்டியடியிலிருந்து மீட்பு

மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் பிரிவின் காரைக்கட்டு பகுதியில் மாடுகளைப் பராமரிக்கும் இளைஞன் ஒருவரின் சடலத்தை தாம் திங்கட்கிழமை 15.01.2018 காலை மீட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் காரைக்கட்டு பகுதியைச் சேர்ந்த அழகையா அற்புதன் (வயது 20) என உறயினர்கள் அடையாளம் காட்டியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த இளைஞன் வழமையாக மாடுகள் மேய்க்கும் தொழிலையே கொண்டிருந்தவர் என்றும் தைப்பொங்கல் தினத்திற்கு மறுநாள் திங்கட்கிழமை வழமை போன்று பட்டிப் பொங்கல் பொங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இருந்ததாகவும் விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயினும் பட்டிப்பொங்கல் தினத்தன்று அவர் சடலமாக மீட்கப்பட்டதாகத் தெரிவித்த பொலிஸார் இம்மரணத்துக்கான காரணம் பற்றி விரிவான விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

சடலம் உடற் கூறு பரிசோதனைக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்டது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]