இளஞ்செழியன் மீதான தாக்குதலை கண்டித்து ஹட்டனில் சட்டதரணிகள் ஆர்ப்பாட்டம்

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீதான தாக்குதலை கண்டித்தும், உயிரிழந்த மெய்பாதுகாவலருக்கு அனுதாபம் தெரிவித்தும் ஹட்டன் நீதிமன்ற சட்டதரணிகள் அமைதியான முறையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்தனர்.

ஹட்டன் நீதிமன்ற வாளகத்தில் இவ்வார்ப்பாட்டம் காலை 10 மணி முதல் 10.30 மணி வரை நடைபெற்றது.
கடந்த சனிக்கிழமை யாழ். நல்லூர் பின் வீதியில் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மீதான தாக்குதலை கண்டித்தும், நீதிமன்ற நீதவான்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரியும் இவ்வார்ப்பட்டம் சட்டதரணிகளால் முன்னெடுக்கப்பட்டது.

நீதிதுறைக்கு எதிரான தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம் என மும்மொழிகளிலும் வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.

ஆர்ப்பாட்டம் முடிந்த பின் இன்று முழுநாளும் நீதிமன்ற செயற்பாடுளிலிருந்து விலகியிருப்பதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட சட்டதரணிகள் தெரிவித்தனர்.

இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் சுமார் 25 சட்டதரணிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடதக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]