இளஞ்செழியன் மீதான தாக்குதலுக்கு விசாரணை அவசியம் : திருமலை சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டம்

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்கதலில் அவரது மெய்ப்பாதுகாவலர் மரணமடைந்துள்ள நிலையில் பொலிசாரின் விசாரணைகள் முற்றுப்பெற முன்னரே இது அவரை இலக்கு வைத்து நடத்தப்பட தாக்குதல் இல்லையென பொலிசார் சம்மவத்தை திசை திருப்பக்கூடாது.

இளஞ்செழியன் மீதான

நீதிமன்றத்தின் மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். அதனை அச்சுருத்தும் நோக்கில் நடைபெற்ற சம்பவம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் மற்றும் பொலிசார் நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என திருகோணமலை சட்டத்தரணி திருமதி புனிதவதி துஷ்யந்தன் தெரிவித்தார்.

இன்று 24ஆம் திகதி திருகோணமலை சட்டத்தரணிகள் சங்கத்தால் திருகோணமலை நீதிமன்ற வளாகத்திற்கு முன் நடாத்திய கண்டன போராட்டத்தின் போது கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில்,

யாழ்பாணத்தில் இடம்பெற்ற மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கினை துள்ளியமாக சர்வதேசமே அவதானித்துக் கொண்டிருக்கின்ற இந்த நிலையில் நீதியை நிலைநாட்ட பாடுபடும் நீதிபதிக்கு அச்சுருத்தல் விளைவிக்கும் செயலாகவே இதை நாம் கருதுகின்றோம்.

இளஞ்செழியன் மீதான

மேலும், தனது உடலில் துப்பாக்கி குண்டுகளை ஏற்று நீதிபதியை காப்பாற்றி இன்று வீரமரணம் அடைந்த மெய்பாதுகாப்பாளர் அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தாருக்கும் திருகோணமலை சட்டத்தரணிகள் சார்பான ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக் கொள்கின்றோம் என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]