இலியானாவின் வாழ்க்கை தத்துவம்!

சினிமாவில் பெரிதாக சாதிக்க வேண்டும் என்ற ஆசையில் வந்த பல இளம்பெண்கள் வாழ்க்கையை தொலைத்துவிட்டு நிற்பதாக நடிகை இலியானா தெரிவித்துள்ளார்.

டொலிவுட்டில் இருந்து சென்று பொலிவுட்டில் செட்டிலான இலியானாவுக்கு அங்கு பெரிசா வாய்ப்பு இல்லை. இருப்பினும் மும்பையிலேயே தங்கி, கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் சினிமா பற்றி கூறுகையில்,

சினிமா எனக்கு உயிர் போன்றது . ஆனால் அதில் மூழ்கிவிடாதே என்று இதயம் கூறுகிறது. இதயம் சொல்வதையே கேட்க விரும்புகிறேன். சினிமா தான் உலகம் என இருக்க மாட்டேன்.

பெண்கள் சினிமாவில் பெரிதாக சாதிக்க வேண்டும் என்று வந்த பல இளம்பெண்கள் நினைத்தது நடக்காமல் மன அழுத்தத்திற்கு ஆளாகி வாழ்க்கையை தொலைத்துவிட்டு நிற்கிறார்கள். அதை எல்லாம் பார்த்து பக்குவப்பட்டுள்ளேன்.

வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன். வாய்ப்பு கிடைக்காவிட்டால் அதை நினைத்து வருந்த மாட்டேன். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய திரையுலகில் 7 ஆண்டு காலம் நிலைத்திரு்தேன்.

எனக்கு 30 வயது ஆகிறது. வயதை சொல்ல வெட்கப்படவில்லை. அதை மறைத்தும் வைக்க மாட்டேன். வயது வெறும் எண் தான். நீங்கள் பார்ப்பதற்கு 23 வயது பெண் போன்று இருக்கிறீர்கள் என்று ரசிகர்கள் கூறுவதை கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது.