இலஞ்சம் வாங்கிய 48 பேர் 11 மாதங்களில் கைது

கடந்த 11 மாதங்களில் இலஞ்ச குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், 48 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இக் காலப் பகுதியில் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் 2470 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதோடு, அவற்றில் 1462 முறைப்பாடுகள் விசாரணைக்குத் தகுதியானவை என, ஆணைக்குழுவினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், 649 முறைப்பாடுகள் இலஞ்சம் தொடர்பான சட்டத்திற்கு உட்பட்டவை அல்ல என, ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த முறைப்பாடுகளுக்கு அமைய, மேற்கொள்ளப்பட்ட 74 சுற்றிவளைப்புக்களில், 38 வெற்றிகரமாக அமைந்துள்ளதாக, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]m