இலஞ்சம் வாங்கிய பொலிஸ் அதிகாரி கைது

கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஒருவர் இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில், இலஞ்ச மற்றும் ஊழல் குற்ற விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

10,000 ருபாய் பணத்தை இலஞ்சமாக பெற்றுக் கொள்ளும் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச மற்றும் ஊழல் குற்ற விசாரணை ஆணைக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

பொலனறுவை பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்த போது, சட்டவிரோத செயல் புரிவதற்காக வந்திருப்பதாக பொறுப்பதிகாரி குற்றம்சுமத்தியதுடன், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காதிருக்க வேண்டுமென்றால் இலஞ்சம் தருமாறு கோரியுள்ளார்.

முதலில் 20,000 ரூபாய் இலஞ்சமாக கேட்ட நிலையில், பின்னர் அந்த தொகையை 10,000 ரூபாயாக குறைத்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட நபரின் அடையாள அட்டை மற்றும் அலைபேசியை குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கைப்பற்றியுள்ளதாக தெரியவந்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]