இலஞ்சம் வழங்கியதாக ஒப்புக்கொண்ட நுவன் சல்கடோ

இலஞ்சம் வழங்கியதாக ஒப்புக்கொண்ட நுவன் சல்கடோ

presidential commission on bond issue

அரச நிதிநிறுவனங்களான, ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தில் இருந்து தகவல்களை பெற்றுக்கொள்ள பெர்பெச்சுவல் ட்ரெஸரிஸ் நிறுவனம் இலஞ்சம் வழங்கியதாக தெரியவந்துள்ளது.

ஜனாதிபதி ஆணைக்குழுவில் இடம்பெற்ற விசாரணையின் போது, பெர்பெச்சுவல் ட்ரெஸரிஸ் நிறுவனத்தின் பிரதம விநியோகஸ்தர் நுவன் சல்கடோ, இதனை ஒப்புக்கொண்டுள்ளார்.

இதேவேளை, குறித்த விசாரணையின் சாட்சியாளரான, அர்ஜூன் அலோசியஸின் தனிப்பட்ட செயலாளரான ஸ்டிவி சாமுவேல், திடீரென நோய்வாய்ப்பட்டு, தனியார் வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருவதாக, அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ஆணைக்குழுவிற்கு தெரிவித்திருந்தார்.

இதன்போது ஆணைக்குழு ஸ்டிவி சாமுவேலை சுகமடைந்தவுடன் முன்னிலையாகுமாறு அறிவித்துள்ளது.

மேலும் அர்ஜூன் மகேந்திரன் தனது சட்டத்தரணியின் குறுக்கு விசாரணைகளுக்கான தமது இறுதியான வாக்குமூலங்களை நேற்றைய தினம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]