முகப்பு News Local News இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் நிருவாகப் பிரிவு குற்றப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி கைது

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் நிருவாகப் பிரிவு குற்றப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி கைது

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் நிருவாகப் பிரிவு குற்றப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி கைது

மட்டக்களப்பு – கல்குடா பொலிஸ் நிலையத்தில் நிர்வாகப் ​பிரிவு மற்றும் குற்றப் பிரிவு ஆகியவற்றின் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிய பொலிஸ் அதிகாரி செவ்வாய்க்கிழமை 10.07.2018 கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பிலிருந்து வந்த இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் இவர் கைது செய்யப்பட்டார்.

உல்லாச புரியான பாசிக்குடா, கல்குடா பிரதேசத்தில் மஸாஜ் நிலையம் ஒன்றை நிருமாணிப்பதற்குத் தேவையான அனுமதியைப பெற்றுக் கொடுப்பதற்காக இவர் வர்த்தகர் ஒருவரிடமிருந்து 3 இலட்சம் ரூபாயை இலஞ்சமாக பெற்றுக்கொண்ட​போது இக்கைது இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com