இலங்கை வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய பாக்கிஸ்தானிய தீவிரவாதி சுட்டுக்கொலை

2009ஆம் ஆண்டு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தானுக்கு ச் சென்றிருந்த இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய தீவிரவாதிகளில் ஒருவர் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் உயிரிழந்திருப்பதாக பாக்கிஸ்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கை வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு

ஆப்கானிஸ்தானின் பர்மல் மாவட்டத்தில் அமெரிக்க இராணுவம் நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில், இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீதான தாக்குதலுக்குத் தொடர்புடைய குவாரி யாஸீன் மற்றும் அவருடன் இருந்த மூன்று பேர் கொல்லப்பட்டதாக அமெரிக்க இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.

இலங்கை வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு

கடந்த 2009ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் திகதி, லாகூர் கடாபி மைதானத்துக்கு அருகே இலங்கை கிரிக்கெட் வீரர்கள் வந்துகொண்டிருந்த பஸ் மீது தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு மற்றும் துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில், அப்போதைய இலங்கை அணியின் தலைவராக இருந்த மஹேல ஜயவர்தனவும் அவருடன் குமார் சங்ககார, டிலான் சமரவீர, அஜந்தா மெண்டிஸ், தரங்க பரனவிதான, சமிந்த வாஸ் ஆகிய 6 பேரும் சிறு காயங்களுடன் உயிர்த்தப்பினர்.

இலங்கை வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு

குறித்த சம்பவத்தையடுத்து பாகிஸ்தானுக்குச் சென்று விளையாடுவதற்கு உலக கிரிக்கெட் அணிகள் இன்றுவரை தயக்கம் காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]