இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!

இலங்கை ரூபாவின் பெறுமதி அண்மைய காலமாக தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வந்த நிலையில் இன்று அதிகரிப்பை கண்டுள்ளது.

இன்று இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபாவுக்கான பெறுமதி அதிகரித்துள்ளது.

அதன்படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 175.82 ரூபாவாகும்.

நேற்றைய தினம் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 177.32 ரூபாவாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]