இலங்கை யுவதி மாயம்

தமிழகத்தின் அகதி முகாமில் இருந்த இலங்கை பெண்ணொருவரை காணவில்லை என பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் – சின்னவேலம் பகுதியில் உள்ள அகதி முகாமில் இருந்த பெண்ணையே கடந்த 3 நாட்களாக காணவில்லை என முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 24 ஆம் திகதி குறித்த 18 வயதுடைய பெண், காலை வேளையில் இருந்து காணாமல் போயுள்ளதாக தமிழ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]