இலங்கை யுத்தத்தில் பயன்படுத்தப்பட்ட ஹெலிகொப்டர்கள் சேவையில் இருந்து நீக்கம்

ஹெலிகொப்டர்கள்இ, லங்கையில் ‘ஒப்பரேசன் பவான்’ நடவடிக்கைக்காக இந்தியப் படையினர் பயன்படுத்திய ரஷ்ய தயாரிப்பான எம்.ஐ.-8 ஹெலிகொப்டர்கள் சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

1972ஆம் ஆண்டு தொடக்கம், கடந்த 45 ஆண்டுகளாக ஹெலிகொப்டர்களை இந்திய விமானப்படை பயன்படுத்தி வந்தது.

இந்த உலங்குவானூர்திகள் நேற்று பிற்பகல் பெங்களூரு ஜலகங்கா விமானப்படைத் தளத்தில் நடந்த நிகழ்வுடன் சேவையில் இருந்து நீக்கப்பட்டன.

இந்திய விமானப்படை 1972ஆம் ஆண்டு தொடக்கம் 107 ஹெலிகொப்டர்களை பயன்படுத்தி வந்தது.

இலங்கையில் இந்திய அமைதிப்படையின் நடவடிக்கைகளின் போதும், கார்கில் போரின் போதும் இந்த ஹெலிகொப்டர்கள் முக்கிய பங்காற்றின.

1987ஆம் ஆண்டு, ‘ஒப்பரேசன் பவான்’ நடவடிக்கையின் ஒரு கட்டமாக, யாழ். பல்கலைக்கழக வைத்தியபீட மைதானத்தில் எம்.ஐ-8 உலங்குவானூர்திகள் மூலம் தரையிறக்கப்பட்ட பரா கொமாண்டோக்களின் அணியொன்று விடுதலைப் புலிகளால் முற்றாக அழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.