இலங்கை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரலாற்றில் முதன்முறையாக அரசியல் விஞ்ஞானத் துறை கலாநிதிப் பட்டம் பெற்றார் ஹிஸ்புல்லாஹ்!!

நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஞாயிற்றுக்கிழமை மாலை 13.05.2018 கொழும்பில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் விஞ்ஞானத் துறை கலாநிதிப் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

இலங்கை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் வரலாற்றில் முதன்முறையாக அரசியல் விஞ்ஞானத் துறையில் இந்தப் பட்டத்தைப் பெற்றுள்ளவர் இவரேயாகும்.

ஷாம்பியா நாட்டின் அலையன்ஸ் இன்ரநேஷனல் பல்கலைக்கழகத்தினால் இப்பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

அரசியல் விஞ்ஞானத்துறையின் கலாநிதிப்பட்டத்தை பெறுவதற்கு “ஆயுத மோதல்களில் மத்தியஸ்தம்” எனும் தலைப்பில் 292 பக்கங்களை கொண்ட ஆய்வறிக்கையை ஹிஸ்புல்லாஹ் சமர்ப்பித்திருந்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]