இலங்கை மீதான பூகோள கால மீளாய்வு அறிக்கை விவாதம் இன்று

இலங்கை தொடர்பான பூகோள கால மீளாய்வு அறிக்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இன்று விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இன்றைய விவாதத்தில் இலங்கை தரப்பு குழுவுக்கு ஜெனிவாவுக்கான நிரந்தர விதிவிடப் பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க தலைமை தாங்குவார்.

அதேவேளை, நாளை மறுநாள் இலங்கை தொடர்பான தமது இடைக்கால அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன், பேரவையில் சமர்ப்பிக்கவுள்ளார்.

இதையடுத்து நடக்கவுள்ள விவாதத்தில் பங்கேற்று பதிலளிப்பதற்காக, வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம உள்ளிட்டோர் அடங்கிய குழு ஜெனிவா செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]