உயர் அழுத்த மின் கம்பிகளின் இணைப்புகளைச் சுத்திகரிக்கும் பொறிமுறைத் தொகுதி இலங்கை மின்சார சபையின் யாழ் பொறியியல் பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ளது

இலங்கை மின்சார சபை

21மில்லியன் ரூபாய் செலவில் ஐரோப்பாவிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட உயர் அழுத்த மின் கம்பிகளின் இணைப்புகளைச் சுத்திகரிக்கும் பொறிமுறைத் தொகுதி இலங்கை மின்சார சபையின் யாழ்ப்பாணம் பொறியியல் பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனூடக யாழ்ப்பாண மாவட்டத்துக்கான மின் தடையை 50 வீதம் குறைக்கலாம் என ‘இலங்கை மின்சார சபை’யின் யாழ்ப்பாண பிரதம பொறியியலாளர் யேசுதாசன் அமலேந்திரன் தெரிவித்தார்.

‘லக்ஸ்பான’ தேசிய மின்னிணைப்பிலிருந்து யாழ்ப்பாண மாவட்டத்துக்கு வரும் மின் மார்க்க உயர் மின் அழுத்த கம்பிகளின் இணைப்புகளுக்கு இடையே தூசிகள் படியும். அவற்றால் மின் விநியோகம் தடைப்படும் அல்லது மின் அழுத்தம் குறைவடையும். அதனால் மின் கம்பங்களின் மாபிள்கள் சுழற்சி முறையில் சுத்திகரிக்கப்படும்.

இவ்வாறு சுத்திகரிகப்படும் போது மின் விநியோகம் இடைநிறுத்தப்படும். இந்த நடைமுறையே இதுவரை பின்பற்றப்பட்டது. தற்போது ‘இலங்கை மின்சார சபை’யால் யாழ்ப்பாணம் மின் பொறியியல் பிரிவுக்கு புதிய சுத்திகரிப்புப் பொறிமுறைக்கான இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்தப் பொறிமுறை இயந்திரத்தின் ஊடாக மின் விநியோகத்தை இடைநிறுத்தாமலேயே மின்கம்ப மாபிள்களை சுத்திகரிக்க முடியும். இந்தப் பொறிமுறை ஊடான சுத்திகரிப்புப் பணிகள் யாழ். மாவட்டத்தில் இன்று (16) காலை ஆரம்பித்து வைக்கக்கப்பட்டன.

இவ் இயந்திரமானது சுமார் 21மில்லியன் ரூபாய் செலவில் ஐரோப்பாவிலிருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ளது வடமாகாணத்தில் மின்சாரத்தின் ஸ்திரத் தன்மையை உறுதி செய்யும் நோக்கில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளமையும். குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]