‘இலங்கை – மலேஷியா’வுக்கு இடையில் மூன்று ஒப்பந்தங்கள் கைச்சாத்து

‘இலங்கை – மலேஷியா’வுக்கு இடையில் மூன்று ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் மூன்று ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டன.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள மலேஷிய பிரதமர் நஜீப் பின் துன் அப்துல் ரஸாக், இன்று காலை ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவை சந்தித்தார்.

ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்த மலேசிய பிரதமரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மகிழ்ச்சியுடன் வரவேற்றார்.

இந்த சந்திப்பின் போது இருதரப்பு உறவுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இதேவேளை, மலேஷிய பிரதமருக்கான உத்தியோக பூர்வ வரவேற்பு நிகழ்வு ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் இன்று காலை இடம்பெற்றது.

இதன்போது 21 மரியாதை வேட்டுகளும் தீர்க்கப்பட்டன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]