இலங்கை மற்றும் இந்திய முதலாவது டெஸ்ட் சமநிலை

இலங்கை மற்றும் இந்திய முதலாவது டெஸ்ட் சமநிலை

இலங்கை மற்றும் இந்திய கிரிக்கட் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி வெற்றி – தோல்வியின்றி நிறைவடைந்துள்ளது.

இன்று இடம்பெற்ற இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 352/8 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் போட்டியை இடைநிறுத்திக் கொண்டது.

இதன்போது விராட் கோலி 104 ஓட்டங்களையும், ஷிக்கர் தவான் 94 ஓட்டங்களையும் பெற்றனர்.

இதேவேளை, தமது இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 7 விக்கட் இழப்புக்கு 75 ஓட்டங்களை பெற்றது.

இந்தநிலையில் முதலாவது இன்னிங்சில் இலங்கை அணி 294 ஓட்டங்களையும், இந்திய அணி 172 ஓட்டங்களையும் பெற்றிருந்தன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]