இலங்கை மருத்துவ சபை வாக்கெடுப்பு இன்று ஆரம்பம்

இலங்கை மருத்துவ சபை

இலங்கை மருத்துவ சபைக்கு நான்கு புதிய உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு இன்று ஆரம்பமாகவுள்ளதாக இலங்கை மருத்துவ சபை தெரிவித்துள்ளது.

இலங்கை மருத்துவ சபையில் அமைக்கப்பட்டுள்ள 7 வாக்கெடுப்பு நிலையங்களில் இன்று மற்றும் நாளை ஆகிய தினங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த வாக்கெடுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பு நேற்று நிறைவடைந்திருந்ததுடன் அதில் 1058 பேர் வாக்களித்துள்ளனர். இம்முறை வாக்கெடுப்பில் கலந்துகொள்ள நாடளாவிய ரீதியிலுள்ள 27,500 வைத்தியர்கள் தகுதி பெற்றுள்ளதுடன் தேர்தலில் 13 பேர் போட்டியிடுகின்றனர்.

தேர்தல் நிறைவடைந்ததை அடுத்து நாளை மாலை வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்று தெரிவு செய்யப்பட்டவர்களின் விவரம் வெளியிடப்படும் என இலங்கை மருத்துவ சபை தெரிவித்துள்ளது.

புதிய உறுப்பினர்களுடன் கூடிய இலங்கை மருத்துவசபை எதிர்வரும் 26ஆம் திகதி கூடும் என, இலங்கை மருத்துவசபை தெரிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]