இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் யாழ் பொலிஸாருக்கு எதிராக 31 முறைப்பாடுகள்

இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் யாழ் பொலிஸாருக்கு எதிராக 31 முறைப்பாடுகள்

நேற்றையதினம் மனித உரிமை தினத்தை முன்னிட்டு யாழ்.கலைத்தூது கலையரங்கில் இடம்பெற்ற நிகழ்வில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் யாழில் பொலிஸாருக்கு எதிராக 31 முறைப்பாடுகள் இந்த ஆண்டு கிடைக்கப்பட்டதாக தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

மனித உரிமைகள் தினம் 70 ஆண்டுகளாக கடைப்பிடித்தாலும் மனித உரிமை மீறல்கள் நம் கண் முன்னே ஊடகங்கள் வாயிலாகப் பார்வையிடுகிறோம்.

யாழ்ப்பாணத்திலுள்ள எமது காரியாலயத்திற்கு இந்த ஆண்டு நவம்பர் மாதம் வரையில் மனித உரிமைகள் பாதிக்கப்பட்ட ஆயிரத்து 500 பேர் முறைப்பாடு செய்ய வருகை தந்திருந்தனர். அதில் சட்ட வரைமுறைகளுக்கமைய 278 முறைபாடுகளையே நாம் ஏற்றுக்கொண்டோம்.

முறைப்பாடு செய்யப்பட்டதில் அதிகளவில் தனிப்பட்ட சுதந்திரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டமை தொடர்பானதாகும்.

பொலிஸாரினால் கைதாகி, காவலில் வைத்து சித்திரவதை மற்றும் தாக்கப்பட்டமை தொடர்பாக 31 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. கடந்த ஆண்டை விட கூடுதலாக இந்த முறைப்பாடுகள் கூடுதலாக உள்ளது. அத்துடன் சட்டத்திற்கு புறம்பாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பில் 13 முறைப்பாடுகள் கிடைக்க பெற்று உள்ளன.

தொந்தரவு தொடர்பில் 27 முறைப்பாடுகள் மற்றும் அரச நிறுவனங்கள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றவில்லை என 71 முறைபாடுகளும் கிடைத்துள்ளது என தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]